January 20, 2007

மோடி வித்தை!

கடந்த வாரம் அகமதாபாத்தில் நடைபெற்ற சர்வதேச தொழில் முதலீட்டளர்கள் உச்சி மாநாட்டில் நாட்டின் தலை எழுத்தை தீர்மானிக்கும் தொழிலபதிபர்களான ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, குமாரமங்கலம் பிர்லா போன்றவர்கள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு புகழ் மாலை சூட்டினார்கள். அவற்றை இந்தியா டுடே(ஜனவரி 31,2007) வெளியிட்டுள்ளது. மீடியாவால் மதவெறியர், முஸ்லிம்களுக்கு எதிரானவர், சிறுபான்மையினருக்கு எதிரானவர், கொடுங்கோலன் என்று பாராட்டப்ட்ட நரேந்திர மோடிக்கு தொழிலதிபர்கள் வழங்கிய பாராட்டுக்களில் சில....

"தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தரப்படும் உறுதிமொழிகள் விரைவில் மறக்கப்பட்டுவிடும். ஆனால் துடிப்பான குஜராத் வித்தியாசமானது. 2003, 2005ல் நடந்த மாநாடுகளில் உறிதியளிக்கப்பட்ட திட்டங்களில் 80 சதவீதம் பூர்த்தி அடைந்து விட்டன. அல்லது பல்வேறு நிலைகளில் அமலாக்கப்பட்டுவிட்டன"
- இந்தியா டுடே(ஜனவரி 31,2007)

"இன்று குஜராத்தில் இல்லாதவர்கள் மக்குகள். மோடியின் தலைமையின் வசீகரமும், செயல்முறைகளும் எங்கள் அனைவரின் மனதையும் தொட்டது"
- கட்ச் மாவட்டத்தில் முந்த்ராவில் 4,000 மெகாவாட் மின்திட்டம் கொண்டு வருவதாய் அறிவித்த டாடா குழுமங்களின் தலைவர் ரத்தன் டாடா.

"மோடி வியக்கத்தக்க வகையில் தெளிவாக தீர்மானமாக இருக்கிறார். அவர் குஜராத்திற்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார்"
-குஜராத்திற்கு ரூ 67,000 கோடி முதலீட்டை அறிவித்த முகேஷ் அம்பானி.



"மோடி குஜராத்தின் சி.இ.ஓ"
- தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லா






"குஜராத் ஒரு உன்னதமான கதை. அந்தக் கதை நரேந்திர மோடியின் துடிப்பான தலைமையைச் சுற்றியே உள்ளது"
- தொழிலதிபர் அனில் அம்பானி



"குஜராத் நல்ல ஆளுகையின் மாதிரி"
-எஃப் ஐசிசி ஐ சேர்மன் கோரக்கிவாலா

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட தொழிலதிபர்கள் நரேந்திர மோடிக்கு புகழ் சூடியதோடு நின்று விடவில்லை. துறைமுகங்கள், மின்சாரம், ஜவுளித் துறை, விவசாயம், உயிரி தொழில் நுட்பம், சுற்றுலா உட்பட பல்வேறு துறைகளில் ரூ 4.5 லட்சம் கோடி மதிப்பீட்டிலான முதலீட்டு திட்டங்ளை அறிவித்தார்கள். இதன் மூலம் 6 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும்.( இதுபோன்ற அறிவிப்புகள் மற்ற மாநிலங்களைப்போல வெறும் அறிவிப்போடு நின்றுவிடுவதில்லை. கடந்த 2003 உச்சி மாநாட்டில் ரூ 65,000 கோடிக்கு 76 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் ரூ.22,000 கோடி மதிப்பிலான 29 திட்டங்கள் உற்பத்தியை துவக்கி விட்டன. ரூ 39,000 கோடி மதிப்பிலான 21 திட்டங்கள் அமல்படுத்தப்படும் நிலையில் உள்ளன. 2005 உச்சி மாநாட்டில் ரூ 1.06லட்சம் கோடிக்கு 227 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதில் ரூ. 23,000 மதிப்பிலான 84 திட்டங்கள் உற்பத்தி நிலையிலும், ரூ. 65,000 கோடி மதிப்பிலான 85 திட்டங்கள் அமல்படுத்தப்படும் நிலையிலும் உள்ளன)

வழக்கம் போலவே இதனை மீடியா அதிகமாக கண்டுகொள்ளவில்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் போன்ற கட்சிகளால் மட்டுமல்ல ஒட்டுமொத்த மீடியாக்களாலும் அதிகமாக இம்சிக்கப்பட்டவர் நரேந்திர மோடி. அவரைப்போல எதிர்ப்புகளைச் சந்தித்த முதல்வர் ஒருவர் இருக்கவே முடியாது. ஆனால் எல்லா எதிர்புகளையும் மீறி குஜராத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் மோடி. மாநில அரசுக்கு உதவ வேண்டிய மத்திய அரசு குஜராத்திற்கு எந்த அளவுக்கு தொந்தரவுகள் கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு கொடுத்து வருகிறது. முதலீட்டாளர்களை குஜராத்திற்கு செல்ல விடாமல் மத்திய அரசு எவ்வளவுதான் தடுத்தாலும் மோடி அவற்றை தவிடுபொடியாக்கி முதலீட்டாளர்களை குஜராத்தை நோக்கி படையெடுக்க வைத்து விடுகிறார். இன்று இந்தியாவிலேயே குஜராத் முதலிடத்தில் இருப்பதற்கு நரேந்திர மோடி தான் காரணம் என்பதை அவரை எதிர்த்த மீடியாவே ஒத்துக்கொண்டுள்ளது. இது நரேந்திர மோடியின் நிர்வாக திறமைக்கு கிடைத்த வெற்றி.

தூற்றுபவர் தூற்றட்டும். பாராட்டுபவர் பாராட்டட்டும் என்று தனது கடமையில் கண்ணாக இருந்து குஜராத்தை நாட்டின் முதல் மாநிலமாக மாற்றியிருக்கிறார் மோடி. அதனால்தான் மாநில முதல்வர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை தொழில்துறை சி.இ.ஓக்களிடம் ஒப்படைத்தால் நரேந்திர மோடி மீண்டும் தேறி விடுவார் என்று எழுதியுள்ளது இந்தியா டுடே. குஜராத்தை எல்லா மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்.

கடைசியாக ஒரு செய்தி.
நாட்டிலேயே அனைத்து கிராமங்களுக்கும் 24 மணி நேர மின்வசதி அளித்துள்ள ஒரே மாநிலம் குஜராத்.



January 17, 2007

மேல்விசாரத்தில் நடக்கும் கொடுமைகள்!

மேல்விசாரத்தில் தமிழுக்கு விஷம்!


மேல்விஷாரத்தைப் பொறுத்தவரை உருதுமொழிக்குத்தான் முதலிடம். தமிழுக்கு இரண்டாவது இடம்தான். மேல்விசாரம் நகராட்சிக் கூட்டத்தில் தலைவரும் உறுப்பினர்களும் உருதுமொழியில்தான் விவாதிக்கின்றனர். அங்குள்ள நூலகத்திலும் உருது நூல்களும், உருது மொழி பத்திரிகைகளும்தான் அதிக அளவில் இருக்கின்றன. ஏதோ பேருக்கு ஒன்றிரண்டு தமிழ் இதழ்களை வைத்திருக்கிறார்கள். மக்கள் உருது மொழி தெரியாதவர்களிடம் மட்டுமே தமிழில் பேசுகிறார்கள்.
»மேல்விசாரத்தில் சுமார் 10 இந்துக் குடும்பங்கள் வசிக்கும் தெருவை முஸ்லிம்கள் `தமிழ் தெரு' என்றுதான் அழைக்கிறார்கள். தெருக்களின் பெயர்களும் கடைகளின் பெயர்களும் உருது மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது.

நகராட்சித் தலைவரை அறிவிக்கும் ஜமாத்!

nமேல்விஷாரம் நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் 14 வார்டுகள் முஸ்லிம்கள் வசிக்கும் மேல்விசாரத்திலும், 3,4,5,6 ஆகிய 4 வார்டுகள் இந்துக்கள் வசிக்கும் இராசாத்துபுரத்திலும் உள்ளன. சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுவரை அங்கு ஊராட்சித் தேர்தலே நடந்ததில்லை. நகராட்சித் தலைவர், கவுன்சிலர்களை மேல்விசாரம் முஸ்லிம் ஜமாத்தே அறிவிக்கும். அவர்களைத் தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இராசாத்துபுரத்தைச் சேர்ந்த இந்து கவுன்சிலர்கள், நகராட்சி கூட்டத்திலேயே முஸ்லிம்களால் தாக்கப்பட்டனர். அதிலிருந்து இராசாத்துபுரம் மக்கள் தேர்தலை புறக்கணித்து வருகின்றனர். தமிழகத்தில் எந்த கட்சி ஆளுங்கட்சியாக இருக்கிறதோ, அந்த கட்சியைச் சேர்ந்தவரைத்தான் நகராட்சி தலைவராக முஸ்லிம் ஜமாத் அறிவிக்கிறது. தற்போது மேல்விஷாரம் அ.தி.மு.க நகர செயலாளர் அஸ்லமின் மனைவி இர்ஃபானா அஸ்லம் நகராட்சித் தலைவராக இருக்கிறார். நகராட்சியில் இந்துக்கள் யாரும் உறுப்பினராக இல்லாததால் அங்கே என்ன நடக்கிறது, என்ன தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்பது யாருக்குமே தெரியவில்லை. நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடப்பதில்லை. முஸ்லிம் பிரமுகர்களின் வீடுகளில் நடக்கிறது என்று தகவல்.
nமேல்விஷாரம் நகராட்சியில் அலுவலகப் பணிகள் அனைத்திலும் முஸ்லிம்களே நியமிக்கப்பட்டுள்ளனர். சாக்கடை சுத்தம் செய்வது, தெரு கூட்டுவது, கழிவறைகளை சுத்தம் செய்வது முதலிய வேலைகளை செய்வதற்கு மட்டும் இந்துக்களை பணியமர்த்தியுள்ளனர்.

மதமாற்றம்!

இப்போது ஆற்காடு தொகுதியில் பா.ம.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பா.ம.கவின் மாநிலத் துணைத்தலைவர் இளவழகன், இராசாத்துபுரத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை லோகநாதன் இந்துக்களின் நலனுக்காகப் பாடுபட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 1991ம் ஆண்டு, `கட்சித் தகராறு' என்ற போர்வையில் அவர் குத்திக் கொல்லப்பட்டார். கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கக் கூடிய பிரமுகரை மேல்விஷாரத்தைச் சேர்ந்த முக்கிய முஸ்லிம் பிரமுகர் ஒருவர் எந்த வழக்கும் இல்லாமல் காப்பாற்றி அவரை முஸ்லிமாக மதம் மாற்றிவிட்டார். இன்று அவர் முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்துகொண்டு அதே ஊரில் சுகபோக வாழ்க்கை வாழ்வதாக இராசாத்துபுரம் மக்கள் கூறுகின்றனர்.

அரிஜன சுடுகாடு முஸ்லிம் குடியிருப்பு ஆனது!

அரசுக்குச் சொந்தமான புறம்போக்கான பாலாற்றுப் படுகையை ஆக்கிரமித்து 270 வீடுகளை முஸ்லிம்கள் கட்டியுள்ளனர். இந்த இடம் அரிஜன மக்களின் இடுகாடாக இருந்தது. இப்போது சட்டத்தைமீறி இந்த 270 வீடுகளுக்கும் மேல்விசாரம் நகராட்சி பட்டாவும் மின் இணைப்பும் கொடுத்துள்ளது. இந்த 270 வீடுகள் இருக்கும் இப்பகுதிக்கு `சாதிக் பாட்சா நகர்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்துக்கள் வசிக்க இடமின்றி சில இடங்களில் குடிசை போட்டு வாழ்கின்றனர். அவர்களுக்கு பட்டாவோ, மின் இணைப்போ இதுவரை வழங்கப் படவில்லை.

ஹிந்துக்களின் நிலங்களை அபகரிக்கும் முஸ்லிம்கள்!

இராசாத்துபுரத்தில் உள்ள இந்துக்களின் விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி, முஸ்லிம் தொழிலதிபர்கள் தோல் தொழிற்சாலைகள் அமைத்துள்ளனர். இந்த தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் கழிவுநீரால் விவசாய நிலங்கள் மலடாகிவிட்டன. விவசாயம் செய்யமுடியாத இந்த நிலங்களை விற்றாவது பிழைத்துக் கொள்ளலாம் என்றால் ரூ. 10,000 மதிப்புள்ள 1 சென்ட் நிலத்தை முஸ்லிம்கள் ரூ.1000த்திற்கு கேட்கிறார்கள். ரூ. 1000க்கு அதிகமாக கொடுத்து யாரும் நிலம் வாங்கக் கூடாது என்று மேல்விஷாரம் முஸ்லிம் ஜமாத் கட்டளை பிறப்பித்திருப்பதாக இராசாத்துபுரம் மக்கள் கண்ணீருடன் கூறுகிறார்கள்.

எல்லாமே ஜமாத்!

கடந்த 25 ஆண்டுகளாக மேல்விசாரத்தில் ஜூஸ் கடை வைத்திருக்கும் அம்ஜத் உசேன் என்பவரை நாங்கள் சந்தித்தோம். இவர் ஆற்காட்டில் வசிக்கிறார். காங்கிரஸ் கட்சியின் ஆற்காடு நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இங்கு எல்லா வசதிகளும் இருக்கிறது. போலீஸ் ஸ்டேஷன் மட்டும் இல்லையே. ஏன்? என்று கேட்டோம். `மேல்விஷாரத்தைப் பொறுத்தவரை எல்லாம் ஜமாத் தான் முடிவு செய்யும். யாரும் ஜமாத்திற்கு தெரியாமல் போலீஸ் ஸ்டேஷன் செல்லமாட்டார்கள். நீங்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு, `ஜமாத் யாருக்கு ஓட்டுப் போட கட்டளை பிறப்பிக்கிறதோ அவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுவோம்' என்று அவர் சொல்ல, இஸ்லாத்தின் பிடியில் ஜனநாயகத்தின் குரல்வளை நெறிபடுவதை நாங்கள் உணரமுடிந்தது.

2. மேல்விஷாரத்தில் அப்துல் ஹக்கீம் என்ஜினீயரிங் கல்லூரியும், அப்துல் ஹக்கீம் கலை அறிவியல் கல்லூரியும், 5க்கும் மேற்பட்ட பள்ளிகள், மிகப்பெரிய அப்பல்லோ மருத்துவமனை, வங்கிகள் என பெரிய நகரங்களுக்கு இணையாக அனைத்து வசதிகளும் உளளன. ஆனால் காவல் நிலையம் மட்டும் இல்லை. எல்லாவற்றையும் முஸ்லிம் ஜமாத்தான் தீர்மானிக்கும்.

3. முஸ்லிம் வெல்ஃபேர் அசோசியேஷன், நேஷனல் வெல்ஃபேர் அசோசியேஷன் போன்ற பல அமைப்புகள் முஸ்லிம்களின் நலனுக்காகப் பாடுபட்டு வருகின்றன.

வழிபாட்டு நிலத்தைக் காப்பாற்ற போராடும் ஹிந்துக்கள்!

இராசாத்துபுரத்தில் புன்செய் சர்வே எண் 256/2ல் உள்ள 31.66 ஏக்கர் நிலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முந்திரித் தோப்பாக இருந்தது. இந்த இடத்தில்தான் வருடந்தோறும் இராசாத்துபுரத்திலுள்ள வன்னிய சமுதாயத்தினரும், அரிஜன மக்களும் காணும் பொங்கலை வெகு விமரிசையாகக் கொண்டாடுவார்கள். இங்கு பல நூறு வருடங்களுக்கு முன்பிருந்தே அம்மன் சிலையும், விநாயகர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது.
பல நூறு ஆண்டுகளாக இந்துக்களின் வழிபாட்டுத் தலமாகவும் காணும் பொங்கல் கொண்டாடும் இடமாகவும் இருந்த இந்த முந்திரித் தோப்பின் மீது முஸ்லிம்களின் பார்வை விழுந்தது. இந்த முந்திரித் தோப்பில் தோல் தொழிற்சாலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கத் திட்ட மிட்டனர். இதற்காக மேல்விஷாரம் நகராட்சியில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர்.
நகராட்சி நிர்வாகம் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தீர்மானம் எளிதாக நிறைவேறியது. ஆனாலும் இராசாத்துபுரம் இந்துக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அவர்களால் அமைக்க முடியவில்லை.
இதனால் திட்டமிட்டு படிப்படியாக அங்கிருந்த 7,000 முந்திரி மரங்களையும் வெட்டி, அந்த முந்திரித் தோப்பை இன்று வெறும் மைதானமாக மாற்றிவிட்டார்கள். இப்படி கொள்ளை போன முந்திரி மரங்களின் மதிப்பு சுமார் 10 கோடி இருக்கும் என்று உள்ளூர் மக்கள் மதிப்பிடுகிறார்கள். இந்த முந்திரித் தோப்பைப் பாதுகாப்பதற்காக சுமார் 10 லட்சம் செலவில் அமைக்கப்பட்டிருந்த 7 அடி உயர முள் வேலியையும் மேல்விஷாரம் நகராட்சி இல்லாமல் செய்துவிட்டது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளையும் கடத்திச் சென்றுவிட்டார்கள். முஸ்லிம்களின் இந்த அராஜகத்தை எதிர்த்துப் போராடியும் பலன் இல்லை.
இந்த 31.66 ஏக்கர் நிலத்தையும் இராசாத்துபுரம் அரசு இந்து உயர்நிலைப் பள்ளி நிர்வாகத்திற்கு மாற்றித் தருமாறு, பலமுறை இராசாத்துபுரம் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்துள்ளனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதனைக் கண்டு கொள்ளவே இல்லை. அந்த இடத்தை எப்படியாவது ஆக்கிரமித்துவிட வேண்டும் என்று வெறியுடன் இருக்கும் முஸ்லிம்கள், இப்போது பாதாள சாக்கடைத் திட்டம் என்ற பெயரில் அந்த இடத்தை ஆக்கிரமிக்கத் திட்டமிட்டுள்ளனர். முஸ்லிம்களின் இந்த எல்லா சதித்திட்டங்களையும் முறியடித்து, எங்களின் வழிபாட்டுத் தலமான அந்த இடத்தைக் காப்பாற்றியே தீருவோம் என்கிறார்கள் இராசாத்துபுரம் இந்துக்கள்.

சொந்த மண்ணில் கொத்தடிமைகளாய் ஹிந்துக்கள்!

கடந்த வாரம் நாங்கள் சொர்க் கத்திற்கும், நரகத்திற்கும் சென்று வந்தோம் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? 25,000-க்கும் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கும் மேல் விஷாரத் திற்கும், 10,000-க்கும் அதிகமான இந்துக்கள் வசிக்கும் இராசாத்து புரத்திற்கும் நீங்கள் சென்றால் சொர்க்கத்திற்கும், நரகத் திற்கும் சென்றுவந்த அனு பவத்தை உணர்வீர்கள். மேல் விஷாரம் சொர்க்கம் என்றால், இராசாத்துபுரம் நரகம்.
இராசாத்துபுரத்தில் குடிநீர், மின்சாரம், சாலை வசதி போன்ற எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. சாக்கடை பாயும் தெருக்களையும், புழுதி பறக்கும் வீதிகளையும் தான் அங்கு பார்க்க முடியும். தோல் தொழிற்சாலை கழிவுநீர் இராசாத்துபுரத்து வழியாகச் சென்றுதான் பாலாற்றில் கலக்கிறது. மேல் விஷாரத்திற்கு சென்றுவிட்டு மதியம் 1 மணிவாக்கில் நாங்கள் இராசாத்துபுரத்திற்கு வந்தோம்.
ஊர் நாட்டாண்மை திரு.கோபால் கவுண்டரையும், விஸ்வ இந்து பரிஷத்தின் ஒன்றிய அமைப்பாளர் உதய குமாரையும் சந்தித்தோம். கோபால் கவுண்டர் வி.இ.பவின் வேலூர் மாவட்ட துணைத் தலை வராகவும் இருக்கிறார். `விஜயபாரத'த்திலிருந்து வந்திருப்பதாகத் தெரிந்ததும் இளைஞர்கள் எங்களை சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் கூறியதைக் கேட்கக் கேட்க பாகிஸ்தான் போன்ற முஸ்லிம் நாடுகளில் இந்துக்கள் அனுபவித்து வரும் கொடுமைகளை, இவர்களும் அனுபவித்து வருகிறார்கள் என்பது புரிந்தது.
இராசாத்துபுரத்தில் ஆண்களும் பெண்களும் பீடி சுற்றும் காட்சியை எல்லா வீடுகளிலும் பார்க்க முடிகிறது. பீடி கம்பெனி முதலாளிகள் எல்லாம் முஸ்லிம்களாக இருக்கிறார்கள். "நாங்கள் முஸ்லிம்களை நம்பி பிழைப்பு நடத்த வேண்டியிருப்பதால் அவர்களை எங்களால் எதிர்க்க முடியவில்லை. எங்கள் ஊரில் சுமார் 8,000 வன்னியர்கள் இருக்கிறோம். அதனால் பாட்டாளி மக்கள் கட்சி எங்களுக்கு உதவுவார்கள் என்று நினைத்து, கடந்த பல தேர்தல்களில் அவர்களுக்கு ஒட்டுமொத்தமாக வாக்களித்தோம்.

ஆனால் பா.ம.கவோ முஸ்லிம் வாக்குகளுக்காக எங்களை கைவிட்டுவிட்டார்கள்" என்று வேதனையுடன் கூறினார்கள் வன்னிய இளைஞர்கள்.
"மேல்விஷாரத்தில் முன்பு நூற்றுக்கும் அதிகமான இந்துக் குடும்பங்கள் இருந்தன. ஆனால் இன்று அந்த எண்ணிக்கை பத்தாகக் குறைந்துவிட்டது. அதுபோல இராசாத்துபுரத்திலும் இந்துக்களின் எண்ணிக்கையை குறைத்து முஸ்லிம்மயமாக்க அவர்கள் திட்டமிடுகின்றனர். இந்துக்கள் வசிக்கும் பகுதிகளில் முஸ்லிம்களைத் திட்டமிட்டு குடியமர்த்தி வருகிறார்கள். திடீர், திடீரென மசூதி கட்டுகிறார்கள். எங்களை விரட்டுவதற்காக பல கொடுமைகளை எங்களுக்கு இழைத்து வருகிறார்கள்" என்று 70 வயதைக் கடந்த பல பெரியவர்கள் நம்மிடம் துக்கத்தோடு கூறினார்கள்.

"ஏழை எளியவர்களுக்காக தமிழக அரசால் ஏதாவது சலுகைகள் அறிவிக்கப்பட்டால்கூட அவைகள் இராசாத்துபுரம் இந்துக்களுக்கு கிடைக்கவிடாமல் திருப்பி அனுப்பப்பட்டு விடுகின்றன" என்று வேதனையுடன் இராசாத்துபுரம் மக்கள் கூறுகின்றனர். காஷ்மீர் மாநிலத்தில் ஷ்ரீநகர் பகுதி முஸ்லிம்களால் ஜம்மு பகுதியில் இந்துக்கள் அனுபவிக்கும் அதே துன்பத்தை இங்கு, மேல்விஷாரம் முஸ்லிம்களால் இராசாத்துபுரம் இந்துக்கள் அனுபவிக்கின்றனர். காஷ்மீரில்கூட தேர்தல் நடக்கிறது. ஆனால் மேல்விஷாரத்தில் இதுவரை உள்ளாட்சி தேர்தலே நடந்தது இல்லை. காஷ்மீரில் நடக்கும் செய்திகளாவது அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிவருகிறது. ஆனால் இராசாத்துபுரத்திலும், மேல்விஷாரத்திலும் என்ன நடக்கிறது என்பது அருகில் உள்ள வாலாஜா, ஆற்காடு மக்களுக்குக்கூட தெரியவில்லை.
பத்திரிகையிலும் இதுவரை செய்திகள் வெளிவந்ததில்லை. வாலாஜா, ஆற்காடு, ராணிப்பேட்டை போன்ற பகுதிகளில் பணிபுரியும் பிரபல பத்திரிகைகளின் நிருபர்களிடம் நாங்கள் மேல்விஷாரத்திற்கு சென்று வந்தோம் என்றால், ஆச்சர்யமாக பார்க்கிறார்கள். அங்கே எப்படி சென்றீர்கள்? நாங்கள் சில விஷயங்களை அவர்களிடம் சொன்னபோது அப்படியெல்லாம் நடக்கிறதா? என்று அதிர்ச்சியுடன் கேட்டார்கள். மேல்விஷாரம் பற்றியும், இராசாத்துபுரம் பற்றியும் செய்திகள் வெளிவந்தால் அந்த பத்திரிகைகளை புறக்கணிக்குமாறு ஜமாத் கட்டுப்பாடு விதித்துள்ளதாம். பத்திரிகை விற்பனைக்காக அவர்களும் அதைப் பற்றி எழுதுவதில்லை.
இராசாத்துபுரம் பற்றி ஈரோட்டில் நடந்த இந்து சமுதாய பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு பல பத்திரிகை நிருபர்களும், தொலைக்காட்சி செய்தியாளர்களும் அங்கு சென்று செய்தி சேகரித்திருக்கிறார்கள். (மேல்விஷாரத்திற்குள் பத்திரிகையாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு யாரும் செல்லமுடியாது. பத்திரிகையாளர்கள் நகராட்சித் தலைவரை மட்டுமே சந்திக்க முடியும். அவர் சொல்வதைத்தான் எழுதிக்கொள்ள வேண்டும்.) ஆனால் எந்தப் பத்திரிகையும், தொலைக்காட்சியும் அதுபற்றி செய்தி வெளியிடவில்லை.
இராசாத்துபுரம் ஒரு தனிவருவாய் கிராமம். இந்த கிராமத்திற்கென தனியாக கிராம நிர்வாக அதிகாரியும் இருக்கிறார். மக்கள்தொகையும் 10,000க்கும் அதிகமாக இருக்கிறது. எனவே இராசாத்துபுரத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும். இராசாத்துபுரம் தனி ஊராட்சி ஆகிவிட்டால் எல்லா பிரச்சினைகளையும் நாங்கள் தீர்த்துக் கொள்வோம். எங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நாங்களே செய்துகொள்வோம். யாரிடமும் கையேந்த வேண்டி இருக்காது. இந்த முறை இராசாத்துபுரத்தை தனிஊராட்சியாக அறிவிக்க வாக்குறுதி கொடுக்கும் கட்சிக்கே வாக்களிப்போம் என்று ஊரின் முகப்பில் இந்துக்கள் பேனர் வைத்துள்ளனர். அதையேதான் அவர்கள் நம்மிடமும் கூறினார்கள். இந்தத் தேர்தலுக்கு பிறகாவது அவர்களுக்கு ஒரு விடிவுகாலம் பிறக்குமா? இல்லை இராசாத்துபுரமும் ஒரு மேல்விஷாரமாக மாறிவிடுமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

சொர்க்கமும் நரகமும்















சொர்க்கம்

(25,000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வசிக்கும் மேல்விசாரம்)

1. வடபெண்ணை ஆறும், பாலாறும் சேருமிடத்தில் போர்வெல் போடப்பட்டு 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட வாட்டர் டேங்க் மூலம் நல்ல சுவையான குடிநீர் தினமும் விநியோகிக்கப்படுகிறது.

2. அனைத்து தெருக்களும் கான்கிரீட் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. தார் சாலைகளையோ, மண் சாலைகளையோ இங்கு பார்க்கவே முடியாது.

















3. எங்கு பார்த்தாலும் இரவைப் பகலாக்கும் சோடியம் விளக்குகள் கண்ணைப் பறிக்கின்றன.

4. மக்களில் பெரும்பாலானோர் தோல் தொழிற்சாலை அதிபர்களாகவும், பீடி கம்பெனி முதலாளிகளாகவும் இருக்கிறார்கள்.

5. சாக்கடை வசதி மிகச் சிறப்பாக இருக்கிறது. நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் எப்போதும் சாக்கடையை சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

6. பேருந்துகள் செல்லும் பிரதான சாலையைத் தவிர மற்ற தெருக்களில் இந்துக்கள் யாரும் நுழையவே முடியாது.
















7. ஊரின் நடுவே உள்ள ஒரே ஒரு இந்துக் கோயிலான விநாயகர் கோயிலில், எப்போது வழிபாடு நடந்தது என்று யாருக்குமே தெரியவில்லை. இப்போது இந்தக் கோயிலை முஸ்லிம்கள் பழைய பொருட்களை போட்டு வைக்கும் கிடங்காகப் பயன் படுத்தி வருகின்றனர்.

8. மேல்விஷாரம் கடைத்தெருக்களில் சலூன் கடை, துணி சலவை இடங்கள் ஆகியவற்றை மட்டுமே இந்துக்கள் நடத்துகிறார்கள்.


நரகம்

(10,000க்கும் அதிகமான ஹிந்துக்கள் வசிக்கும் இராசாத்துபுரம்)
















1. பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுநீர் கலக்கும் இடத்தில் போர்வெல் போடப்பட்டு அங்கிருந்து கிடைக்கும் உப்பு நீர் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்படுகிறது.

2. சாலை வசதி அறவே இல்லை. குண்டும் குழியுமான மண் சாலைகள்தான் நம்மை வரவேற்கின்றன.


















3. பல தெருக்களில் சாதாரண ட்யூப்லைட் கூட கிடையாது. பகலில்தான் இங்கு வெளிச்சத்தைப் பார்க்க முடியும்.

4. பெரும்பாலான மக்கள் பீடி சுற்றும் கூலித் தொழிலாளர்கள், சிலர் கட்டடத் தொழிலாளர்கள்.

5. கழிவுநீர் தெருக்களின் நடுவே ஆறாக பாய்கிறது. நகராட்சி ஊழியர்கள் இங்கு வந்ததாக சரித்திரம் இல்லை. சாக்கடையை அவர்களே சுத்தம் செய்து கொள்கிறார்கள்

6. இந்துக்கள் வசிக்கும் தெருக்களிலேயே முஸ்லிம்கள் சுதந்திரமாக
குடியிருக்கிறார்கள்.



















7. மூன்று மிகப்பெரிய மசூதிகள் உள்ளன. அந்தப் பகுதிக்குள் இந்துக்கள் செல்லவே முடியாது. இருக்கும் நான்கைந்து இந்துக் கோயில்களும் சரியான பராமரிப்பின்றி இருக்கின்றன.

8. கடைவீதிகளில் பெரும்பாலான
கடைகள் முஸ்லிம்களுக்குச் சொந்தம்.


தமிழகத்தில் ஒரு பாகிஸ்தான்!

அது 25,000க்கும் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கும் ஒரு சிறு நகரம். அங்கு ஆண்கள் அனைவரும் லுங்கியும், நீண்ட ஜிப்பாவும், தலையில் குல்லாவும் அணிந்து கொண்டு நடமாடுகிறார்கள். இரண்டு வயது குழந்தையின் தலையில்கூட குல்லா இருக்கிறது. பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. அப்படியே வந்தாலும் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கருப்புத்துணி அணிந்து கொண்டுதான் வருகிறார்கள்.
அந்த நகரில் உள்ள நீண்ட கடைவீதியில் கடைகளின் பெயர்ப் பலகைகள் உருது மொழியில் மின்னுகிறது. தெருக்களின் பெயர்களும் அரசு அலுவலகங்கள், வங்கிகளின் பெயர்களும் உருது மொழியிலே எழுதப்பட்டுள்ளன. அங்கு உள்ள ஒரே நூலகத்தில் குல்லா அணிந்த இஸ்லாமிய இளைஞர்கள் உருது பத்திரிகைகளைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் அனைவரும் உருது மொழியிலேயே பேசுகிறார்கள். அங்கு உள்ள பள்ளிக்கூடங்களில் உருதுதான் முக்கிய பாடம். உருது மொழிப் பாடலை ஆசிரியர் பாட, முஸ்லிம் சிறுவர்களும், சிறுமிகளும் உரக்கப் பாடுவது அந்த வழியாகச் செல்பவர்களின் காதுகளைக் கிழிக்கிறது.
நகரில் எங்கு பார்த்தாலும் மிகப்பெரிய கட்டடங்களும், அரபுக் கலைநுணுக்கங்களுடன் பல்வேறு வடிவங்களில் கட்டப்பட்ட மசூதிகளும் அவர்களின் செல்வ வளத்தைப் பறைசாற்றுகின்றன. இந்த சிறு நகரில் இத்தனை மசூதிகளா? என்று நாம் ஆச்சரியப்பட்டு கேட்டால், உலகத்திலேயே ஐந்தாவது பெரிய மசூதி இங்குதான் இருக்கிறது என்று அங்குள்ள முஸ்லிம்கள் பெருமையுடன் சொல்கிறார்கள். (இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை). அந்த நகரம் பாகிஸ்தானிலும் இல்லை, ஆப்கானிஸ்தானிலும் இல்லை. நமது தமிழகத்தில், அதுவும் தலைநகர் சென்னையில் இருந்து 3 மணி நேரப் பயணத்தில் இருக்கிறது என்றால் உங்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் அதுதான் உண்மை.
அந்த அதிர்ச்சி நகரத்தின் பெயர் மேல்விஷாரம். வேலூர் மாவட்டம் வாலாஜா தாலுகாவில் ஆற்காட்டிற்கு அருகே இருக்கிறது இந்த நகரம். பேரூராட்சியாக இருந்த மேல்விஷாரம் 10 மாதங்களுக்கு முன்புதான் மூன்றாம் நிலை நகராட்சியாக மாற்றப்பட்டது. இந்த மேல்விஷாரம் நகராட்சியில் 25,000க்கும் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கும் மேல்விஷாரம் என்ற ஊரும், 10,000க்கும் அதிகமான இந்துக்கள் வசிக்கும் இராசாத்துபுரம் என்ற ஊரும் இருக்கிறது.
கடந்த மார்ச் 18, 19 தேதிகளில் ஈரோட்டில் நடந்த இந்து சமுதாய பாதுகாப்பு மாநாட்டில் மேல்விஷாரம் பேரூராட்சியில் இணைக்கப்பட்டுள்ள இராசாத்துபுரம் என்ற தனி வருவாய் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் அங்கு என்னதான் நடக்கிறது என்று அறிவதற்காக மேல்விஷாரத்திற்கும் இராசாத்துபுரத்துக்கும் சென்றோம். நாங்கள் முதலில் முஸ்லிம்கள் வசிக்கும் மேல்விஷாரத்திற்கு சென்றோம். பேருந்தை விட்டு இறங்கியவுடன் ஏதோ பாகிஸ்தானில் உள்ள ஒரு பகுதிக்கு வந்துவிட்டதைப் போன்ற ஒரு பிரமை எங்களுக்கு ஏற்பட்டது. அப்போது நாங்கள் கண்ட காட்சியைத்தான் இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் வர்ணித்துள்ளோம். மேல்விஷாரம் நகராட்சியில் தீர்மானங்கள் உருது மொழியில் நிறைவேற்றப்படுகின்றன. அங்குள்ள பாரத ஸ்டேட் வங்கியிலும் உருது பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது
மேல்விஷாரத்தை நாங்கள் கிட்டத்தட்ட 3 மணி நேரம் வலம் வந்தோம். ஆனாலும் அங்கு முஸ்லிம் அல்லாத ஒருவரைக்கூட எங்களால் பார்க்க முடியவில்லை. முஸ்லிம் தெருக்களில் நாங்கள் உலா வந்தபோது வழிபாடு நடக்காத ஒரு சிறிய கோயிலைப் பார்த்தோம். அந்தக் கோயில் இருக்கும் தெருவில் சுமார் 10 இந்துக் குடும்பங்கள் வசிக்கிறார்கள். அந்த 10 வீடுகளின் கதவுகளும் ஜன்னல்களும் சாத்தப்பட்டிருந்தன. கோயில் அருகே வாசலில் கோலமிடப்பட்டிருந்த ஒரு வீட்டின் கதவைத் தட்டினோம். 25வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கதவைத் திறந்து மிரட்சியுடன் எங்களைப் பார்த்தார். இது என்ன கோயில்? என்று மெதுவாகக் கேட்டோம். எனக்குத் தெரியாது என்று கூறி மெல்ல கதவைச் சாத்திக் கொண்டார். பயமும் அச்சமும் அவரது கண்களில் தெரிந்தது. பிறகு என்ன நினைத்தாரோ, மீண்டும் கதவைத் திறந்து ரோட்டிற்கு வெளியே ஆற்றங்கரையில் ஒரு சிவன் கோயில் இருக்கிறது. அங்கு விசாரித்தால் சொல்வார்கள் என்று கூறி மீண்டும் கதவைச் சாத்திக் கொண்டார். மேல்விஷாரத்தில் யாரிடம் எதைக் கேட்டாலும் `தெரியாது' என்ற வார்த்தைதான் பதிலாக வருகிறது.
நாங்கள் அங்குள்ள கிளை நூலகத்திற்குச் சென்றிருந்தோம். `த ஹிந்து' நாளிதழை தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்த ஒரு முஸ்லிம் இளைஞரிடம் நகராட்சி அலுவலகம் எங்கிருக்கிறது? என்றோம். தெரியாது என்று பதிலளித்தார். பிறகு அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் ஒரு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் என்பது தெரிந்தது. ஒரு என்ஜினீயரிங் மாணவருக்கு அவரது நகராட்சி அலுவலகம் எங்கிருக்கிறது என்பது எப்படி தெரியாமல் போகும்? புதிய நபர்களுக்கு எந்த தகவலும் சொல்லக்கூடாது என்று ஜமாத் கட்டுப்பாடு விதித்துள்ளது என்ற உண்மையை ஒருவர் நம்மிடம் ஒப்புக்கொண்டார். மேல்விஷாரத்தில் பாரத ஸ்டேட் வங்கிக்கு எதிரே ஜூஸ் கடை வைத்திருக்கும் அம்ஜத் உசேனிடம் சாத்துக்குடி ஜூஸ் குடித்துக்கொண்டே பேச்சுக் கொடுத்தோம். இராசாத்து புரத்தை தனி ஊராட்சியாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று அங்கு பேனர் வைத்துள்ளார்களே என்ன பிரச்சினை என்று கேட்டோம்.
நாங்கள் (முஸ்லிம்கள்) நடத்தும் ஒரு என்ஜினீயரிங் கல்லூரியும், ஒரு கலை அறிவியல் கல்லூரியும் இராசாத்துபுரம் பகுதியில் இருக்கிறது. இப்போது இராசாத்துபுரத்தில் உள்ள வன்னியர்கள் நாங்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தனி ஊராட்சியாக பிரித்து விட்டால், கல்லூரி விஷயமாக நாங்கள் அவர்களிடம் செல்ல வேண்டியதிருக்கும். எனவே இராசாத்துபுரம் தனி ஊராட்சியாகப் பிரிக்கப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றார். அவரது பேச்சில் இருந்த உறுதி எங்களை ஆச்சரியப்பட வைத்தது. முஸ்லிம் ஜமாத்தின் முக்கியத்துவத்தை நமக்கு அவர் விவரித்தார்.
மேல்விஷாரம் நகராட்சியில் கட்டடத் திறப்புவிழா போன்ற முக்கிய விழாக்களில் முஸ்லிம் ஜமாத் தலைவர்கள்தான் கலந்து கொள்வார்கள். அரசியல்வாதிகளோ, அரசு அதிகாரிகளோ விழாக்களுக்கு அழைக்கப்படுவதில்லை. முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் மேல்விஷாரம் ஒரு சொர்க்க பூமி. அங்கு மெக்காவிலிருந்து ஒரு இமாம் அடிக்கடி வந்து போகிறார். பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பல தோல் தொழிற்சாலை அதிபர்கள் இங்குதான் வசிக்கிறார்கள். ஆனால் சொர்க்கத்திலும் நரகத்தை அனுபவிப்பவர்கள் இருக்கத்தான செய்கிறார்கள். முஸ்லிம் பெண்கள்தான் அந்த பரிதாபத்திற்குரியவர்கள். வருடத்தில் 10 மாதங்களுக்கு மேல் கடும் வெப்பம் நிலவும் அந்த பகுதியில், உடல் முழுக்க கருப்புத் துணி அணிந்து கொண்டு நடமாடுகிறார்கள். மர்ம தேசத்திற்குள் நடமாடும் மர்ம தேசங்கள் இவர்கள். l

January 11, 2007

"அல்லாவுக்காக அம்மாவையும் கொல்வேன்"

"நான் 22 காஷ்மீர் பண்டிட்களை கொன்றிருக்கலாம். என்னால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக கூட இருக்கலாம். எனக்கு சரியாக நினைவில் இல்லை" என்று ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளான் பரூக் அகம்மது தர் என்கிற இஸ்லாமிய பயங்கரவாதி. காஷ்மீர் மாநில ஆல் இந்தியா ரேடியோவுக்கு அவன் அளித்துள்ள பேட்டி மனித்தன்மை உள்ள எல்லோரையும் கதிகலங்க வைத்துவிடும். இஸ்லாம் எப்படி ஒரு மனிதனை மிருமாக்குகிறது என்பதற்கு இப்பேட்டியே சாட்சி. இஸ்லாத்திற்காக சொந்த சகோதரனை ஏன் பெற்ற தாயைக்கூட கொல்ல தயங்க மாட்டேன் என்று கொஞ்சம்
கூட இரக்கம் இல்லாமல் சர்வ சாதாரணமாக சொல்கிறான் பரூக் அகம்மது தர். இஸ்லாமை புரிந்து கொள்ள இந்த பேட்டி உதவும் என்று நம்புகிறேன்.


நீ ஏன் பயங்கரவாதி ஆனாய்?
உள்ளூர் நிர்வாகத்தின் தொல்லையால் வெறுப்படைந்து பயங்கரவாத கூட்டத்தில் இணைந்தேன்.
அதனால்தான் பாரதத்தின் விரோதி ஆனாயா?
ஆமாம்.
உள்ளூர் நிர்வாகம் உன்னை சரியாக கவனிக்கவில்லை என்பது தான் நீ தேச விரோதி ஆனதற்கு காரணமா?
ஆமாம்.
அதனால்தான் அப்பாவி மக்களை படுகொலை செய்ய ஆரம்பித்தாயா?
நானாக அப்பாவிகளைக் கொல்லவில்லை. மேலிட உத்தரவுப் படி கொலை செய்தேன்.
மேலிடம் என்றால் யார் உத்தரவு இடுவது?
இஷ்பாக் மஜித் வானி.
(காஷ்மீர் விடுதலை முன்னணி ஏரியா கமாண்டர் இஷ்பாக் மஜித் வானி, பயங்கரவாத இயக்கத்தில் இணைய விருப்பம் தெரிவித்த பரூக் அகம்மது தர்யை, எல்லைக் கோட்டுக்கு அப்பால் பாக். ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு அழைத்துச் சென்று 32 நாட்கள் பயிற்சி அளித்துள்ளான். பாகிஸ்தானியர்கள் யாரையும் நம்புவதில்லை. இவர்களின் கண்களைக் கட்டியே பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்)
ஆக, அவர்கள் உங்களை நம்புவதில்லை. உங்களை எங்கு அழைத்துச் சென்றாலும் கண்களைக் கட்டித்தான் அழைத்துச் செல்வார்கள். அப்படித்தானே?
என்னை மட்டுமல்ல, எல்லாரையும் அப்படித்தான் அழைத்துச் செல்வார்கள்.
உங்களை துளியும் நம்பாத அவர்களுக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறீர்கள்?
அப்படியல்ல. காஷ்மீரைப் பிரித்து விடுவோம்; காஷ்மீருக்கு விடுதலை கிடைக்கும் என்றே நம்பினோம். அப்படித்தான் எங்களுக்கு சொல்லப்பட்டது.
எப்போது கொலை செய்தாலும் இஷ்பாக் அகமத் வானியின் கட்டளைப்படி மட்டும்தான் கொலை செய்வாயா அல்லது உனது சொந்த முடிவின் அடிப்படையிலும் கொலை செய்வாயா?
இல்லை. மேலிடத்தின் உத்தரவுப் படியே கொலை செய்வேன். நானாக யாரையும் எப்போதும் கொன்றது இல்லை.
ஆக உத்தரவுப் படி யாரை வேண்டுமானாலும் கொலை செய்வாய்?
ஆமாம்.
யாராக இருந்தாலும் என்றால் சொந்த சகோதரனைக் கூடவா?
ஆம்... உடன் பிறந்த சகோதரன் என்றாலும் கொன்றிருப்பேன்.
உன் அம்மாவையே கொல்லச் சொன்னாலும் கொன்றிருப்பாயா?
ஆமாம், அம்மாவை கொல்லும் படி கட்டளை வந்தாலும் கொன்றிருப்பேன்.
இது கொத்தடிமைத்தனத்தை விட கேவலமானது இல்லையா?
கொத்தடிமைத்தனமெல்லாம் இல்லை. அமைப்பில், யார் சேர்ந்தாலும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். என்னென்ன பணியென்று ஆரம்பத்திலேயே சொல்லி விடுவார்கள். விருப்பம் இல்லாதவர்கள் வெளியேறி விடலாம்.
(காஷ்மீர் விடுதலை முன்னணிக்கு வேலை செய்யும் பரூக் அகம்மது தர்க்கு மதப் பற்றும் பாக்.பாசமும் தேச விரோத உணர்ச்சிகளும் கண்ணை மறைத்து விட்டன; அதனால் அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பதற்கு அவனுக்கு தயக்கமே இல்லை.)
கொல்லப்படும் நபர் பாவியா, அப்பாவியா என்று உனக்கு எப்படி உறுதியாகத் தெரியும்?
தெரியாது.
படுகொலைக்கு கட்டளை வரும்; நீ கொல்வாய், அப்படித்தானே?
ஆமாம்.
எத்தனை பேரை கொன்றிருப்பாய்?
நினைவில் இல்லை.
ஆக, நினைவுபடுத்திச் சொல்ல முடியாத எண்ணிக்கையில் ஏராளமானோரைக் கொன்று குவித்திருக்கிறாய் அப்படித்தானே...?
10 - 12 இருக்கலாம்.
10-12 ஆ அல்லது 20 ஆ?
20 என்றும் சொல்லலாம்.
இவர்கள் அனைவரும் காஷ்மீர் பண்டிதர்களா? இல்லை, ஒரு சில முஸ்லிம்களும் உண்டா?
ஒரு சில முஸ்லிம்களும் உண்டு.
எத்தனை முஸ்லிம்கள்? எத்தனை பண்டிதர்கள்?
(மௌனம்...)
பண்டிதர்கள்தான் அதிகமா?
ஆமாம்.
ஏன்?
கட்டளை அப்படி.
நீ முதன்முதலில் கொலை செய்த நபர் யார்?
(மௌனம்; நீண்ட யோசனை)
முதலில் செய்த கொலை எப்போது?
கொஞ்சம் பொறுங்கள் யோசிக்கிறேன். சதீஷ் என்பவரை நான் முதலில் கொன்றேன்.
சதீஷ் யார்?
சதீஷ் குமார் டிக்கு.
யார் இந்த சதீஷ் குமார்?
மேலிடத்து உத்தரவு. கொலை செய்தேன்.
சதீஷ் யாரு?
காஷ்மீர் பண்டிதர்.
காஷ்மீர் பண்டிதர் என்பதால்தான் கொலை செய்தாயா?
ஆர்.எஸ்.எஸ்ஸைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம்.
அதனால் என்ன? ஆர்.எஸ்.எஸ் இருப்பது குற்றமா? ஆர்.எஸ்.எஸ்ஸைச் சேர்ந்தவர் என்றால் நீ கொன்றுவிடுவாயா?
நான் முன்பே சொன்னது போல மேலிடத்துக் கட்டளைப்படி குறிப்பிட்ட நபரைக் கொலை செய்வேன். வேறு யாருக்கு இந்தக் கட்டளை கிடைத்தாலும் செய்திருப்பார்.
எந்த ஆயுதத்தால் கொன்றாய்?
கைத்துப்பாக்கியால்.
எப்போதும் கைத்துப்பாக்கிதானா? ஏ.கே. 47ம் உண்டா?
ஏ.கே. 47 ஆல் பாதுகாப்பு வீரர்களைத் தாக்குவோம்.
அப்படின்னா, தனிநபரை கொல்ல கைத்துப்பாக்கியா?
ஆமாம்.
தனியாகவே சென்று கொலை செய்வாயா? அல்லது துணைக்கு சிலபேரை வைத்துக் கொள்வாயா?
பொதுவாக தனி ஆளாகச் செல்வேன்.
முகமூடி அணிவதுண்டா?
இல்லை; முகமூடி அணிவதில்லை.
அப்படியென்றால், நீ கொலை செய்வதை பொதுமக்கள் பார்த்ததுண்டா?
ஆமாம்.
அப்ப மக்கள் உன்னை அடையாளம் கண்டிருக்கலாம்?
ஆமாம்.
அப்படின்னா, அவர்கள் உன்னை போலீஸிடம் ஒப்படைக்கவில்லையா?
இல்லை. அப்போதெல்லாம் எங்களுக்கு மக்கள் ஆதரவு இருந்தது.
யாரையாவது கொல்ல முயன்று தோற்றது உண்டா?
இல்லை.

ஒவ்வொரு முறையும் கொலை முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறாய்?
ஆமாம்; குறிதப்பாது கச்சிதமாக கொலை செய்து முடித்திருக்கிறேன்.
எப்படி முடிந்தது? ஆச்சர்யமாக இருக்கிறது?
உடல் பலத்தைப் பொறுத்தது. கைத்துப்பாக்கியால் சுடுவது கடினமானது; புஜபலம் தேவை.
குறைந்த இடைவெளியில் நின்று சுடுவாயா?
இல்லை, சற்று தொலைவிலிருந்துதான்.

எவ்வளவு தொலைவு?
30 கெஜ தூரம்.
அவ்வளவு தொலைவில் இருந்து கைத்துப்பாக்கியால் சுடமுடிந்ததா?
ஆமாம்.
எங்கு குறி வைப்பாய்? தலையையா, மார்பையா?
பெரும்பாலும் தலையையோ, மார்பையோ குறிவைப்பேன்.
மக்கள் செத்து விழும்போதோ, அல்லது கண்முன்னால் குண்டடிப்பட்டுத் துடிக்கும்போதோ வருத்தப்பட்டதுண்டா? நம்மைப் போன்ற ஒரு மனிதனின் உயிரைக் குடிக்கிறோமே என்று நினைத்ததுண்டா?
ஆரம்பத்தில் நினைத்ததுண்டு; பிறகு அப்படியேதும் இல்லை.
(பரூக் அகம்மது தர் பின்தொடர்ந்த இஷ்பாக் வானி, தான் முன்பு பலபேருக்கு இழைத்த கொடூரம் போலவே தானும் கொடூரமான முறையில் உயிரிழந்தான்.)
இஷ்வாக் மஜித் இறந்தது எப்படி?
ஒரு நேரடி சண்டையில் இறந்தான்.
நேரடி சண்டையிலா?
ஆமாம்.
உண்மையில் நேரடி சண்டையிலா?
உண்மையான நேரடி சண்டையில்தான்.
அவன் பாதுகாப்பு படையை நோக்கி சுட்டபோதா?
இல்லை; சண்டையில் அரணாக நின்று கொண்டிருந்தபோது.
அப்படியென்றால், வீரர்களோடு சண்டையிட்ட போதா?
மற்ற பையன்கள் சண்டையிட்டனர். இவன் கைகுண்டை தூக்கியெறிய முயன்றான். அப்போது சுடப்பட்டான்.
(கடந்த காலத்தை நினைக்கும்போது பாகிஸ்தான் தங்களை ஏமாற்றி விட்டதாக பரூக் அகம்மது தர் நினைக்கிறான்)
1988-ல் பயிற்சி எடுத்தபோது, காஷ்மீர் மாநிலத்தில் வேலை செய், மக்கள் உனக்கு ஆதரவு தருவார்கள். மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று பாகிஸ்தான் தரப்பு சொன்னது.
அப்படின்னா என்ன அர்த்தம்?
பாரதத்தை பாகிஸ்தான் தாக்கும் என்று அர்த்தம்.
அப்படி நடக்கவில்லையே?
அப்படி நடக்கவில்லை.
எப்படி உணர்ந்தாய்?
மிகவும் வருத்தப்பட்டேன்.
ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தாயா?
ஆமாம், அப்பட்டமாக ஏமாற்றப்பட்டோம்.
இப்படிப்பட்ட ஆயுதம் ஏந்துவது, அப்பாவி ஜனங்களைக் கொல்வது, குண்டு எறிவது போன்ற உனது நடவடிக்கை பயங்கரவாதிகள் செல்லும் வழி.
பாரதத்தைத் துண்டாடி, காஷ்மீரைப் பிரித்தெடுக்க உதவுமா?
கஷ்டம் என்று நினைக்கிறேன்.
கஷ்டமா? இல்லை சாத்தியமில்லையா?
சாத்தியமில்லாத கடினமான விஷயம்.
உங்கள் கனவு நிறைவேறாது என்றால் இன்னும் அந்த வழியில் செல்வது ஏன்?
பயங்கரவாதிகள் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தணும், கொள்ளையும் கற்பழிப்பும் தொடர்கிறது.
என்ன நடக்கிறது?
கற்பழிப்பு நடக்கிறது.
யாரை?
பெண்களை.
யார் செய்கிறார்கள்?
தெரியாது. ஆனால் நடக்கிறது. கொள்ளை, கத்திமுனையில் பணப்பறிப்பு, இன்னும் இதேபோல பல அக்கிரமங்கள்.
பயங்கரவாதிகளா செய்கிறார்கள்?
ஆமாம், பயங்கரவாதிகள்தான்.
கூடவே பயங்கரவாதிகள் பெண்களையும் கற்பழிக்கின்றனரா?
ஆமாம், பயங்கரவாதிகள்தான் இதை செய்கிறார்கள்.
தாங்கள் குறிப்பிடும் நபருக்கு, பெண்களை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனரா?
அது தெரியாது.
ஆனால் பயங்கரவாதிகள் பெண்களைக் கற்பழிக்கின்றனர் என்பது உனக்குத் தெரியும்?
ஆம். நிச்சயமாகத் தெரியும்.
துப்பாக்கி முனையில் பணம் பறிப்பதும் தெரியுமா?
தெரியும்.
பெருமளவில் பயங்கரவாதிகள் சரண் அடைவது பற்றி பிட்டாவின் கருத்து என்ன?
சரண் அடையும் பயங்கரவாதிகள் சரியான முடிவை எடுத்திருக்கிறார்கள்.
அது சரியான முடிவு என்கிறாயா?
ஆமாம், சரியான முடிவு.
ஆனால் போராடும் மற்ற பயங்கரவாதிகள் இதை அனுமதிப்பார்களா?
அவர்களும் சரணடைய வேண்டும்.
சரணடைய வேண்டும் என்பது வேறு விஷயம். ஆனால் என்ன நடக்கும்?
புரியவில்லை. என்ன கேட்கிறீர்கள்?
3,000த்துக்கும் மேலான பயங்கரவாதிகள் சரண் அடைவார்களா?
இல்லை.
அப்ப உண்மையில் என்ன நடக்கும்?
நான் சொன்னது மாதிரி சர்வநாசம்.
உனக்கு என்ன தண்டனை கிடைக்கும்?
என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன்.
தண்டனை என்னவாக இருக்கும் என நினைக்கிறாய்?
ஆயுள்தண்டனை கிடைக்கும் என நினைக்கிறேன். ஒருவேளை தூக்கில் இடப்படலாம்.
இரண்டில் எதற்கு அதிக வாய்ப்பு?
தூக்கிலிட்டு சாகடிக்கப்படலாம்.
அதை ஏற்றுக்கொள்கிறாயா?
ஏற்றுக் கொள்கிறேன்.
- சர்வ சாதாரணமாக கொலைத் தொழில் புரியும் இந்த நபர், தானும் அதற்கே பலியாவதைத் தெரிந்து வைத்திருக்கிறான். பெற்ற தாயையே கொலை செய்யத் தயங்காத இழிசெயலைத் தூண்டும் கொள்கை என்ன கொள்கையோ?

January 01, 2007

பெற்றோர்களிடம் ஆசி பெறுவது அந்நிய கலாச்சாரமா?

அந்நிய கலாசாரமான தாலிகட்டுவதும், தாலியைப் புனிதமாகக் கருதுவதும், தாலி சங்கிலியோ கருக மணியோ அறுந்து விட்டால் அபசகுனமாகக் கருதுவதும், மெட்டி அணிவதும் தவறாகும். திருமணத்திற்கு முந்தைய நாள் நலங்குகள் செய்வது, மருதாணி இடுவது, திருமணத்தின்போது மாலை மாற்றிக்கொள்வது இவையெல்லாம் அந்நிய கலாசாரம். திருமணத்தன்று மணமக்கள் குடும்பப் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுவது, மணமக்களை வரவேற்பதற்கு ஆரத்தி எடுப்பது, மணமக்களை ஒரே மேடையில் அமர வைப்பது, இசை நிகழ்ச்சிகள் நடத்துவது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டிய நடைமுறையாகும். குழந்தைகளுக்கு பெயர்சூட்டு விழா, பிறந்தநாள் விழா, காதணி விழா, பூப்பு நன்னீராட்டு விழா என்று எதையும் கொண்டாடக் கூடாது. இவையெல்லாம் அந்நிய கலாசாரங்கள். இப்படி யாராவது சொன்னால் என்ன நினைப்பீர்கள்? பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணின் மக்களால் பின்பற்றப்படும் பழக்க வழக்கங்களை அந்நிய கலாசாரம் என்று சொல்வபர்கள் வெளிநாட்டவர்களாகத்தான் இருப்பார்கள் என்ற முடிவுக்கு வருவீர்கள்.


ஆனால் தாலி கட்டுவதையும், ஆரத்தி எடுப்பதையும் அந்நிய கலாசாரம் என்றும், இதனை பின்பற்றக் கூடாது என்றும் அறிவுரை வழங்கியிருப்பது யார் தெரியுமா? சென்னை பெரம்பூரிலிருந்து வெளிவரும் மாதமிருமுறை இஸ்லாமிய இதழான `சமரசம்' தான் இஸ்லாமியர்களுக்கு இப்படி அறிவுரை வழங்கியுள்ளது. "இன்றைய முஸ்லிம் குடும்பங்களில் இஸ்லாத்திற்கு எதிரான பல அம்சங்கள் சர்வ சாதாரணமாகக் காணப்படுகின்றன.இவை யாவும் இந்தியாவைத் தவிர வேறு எங்கும் காணப்படுவதில்லை" என்றும் அந்த இதழ் ஆதங்கப்பட்டுள்ளது.

ஆரத்தி எடுப்பது, காதணி விழா, பூப்பு நீராட்டு விழா நடத்துவது, பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெறுவது, மாலை மாற்றிக் கொள்வது ஆகியவை தமிழ் கலாசாரம் என்பது பாமரனுக்குக்கூட தெரியும். அப்படியென்றால் தமிழ் கலாசாரமான இவற்றையெல்லாம் அந்நிய கலாசாரம் என்று சொல்பவர்கள் யார்? தன்னை உலக தமிழர்களின் தலைவர் என்று சொல்லிக் கொள்பவர்தான் பதில் சொல்ல வேண்டும். நாங்கள் இஸ்லாமியர்கள் மட்டுமே, தமிழர்கள் அல்ல. எங்களுக்கு நாட்டை விட இஸ்லாமே முக்கியம் என்பதை அவர்களே ஒப்புக்கொண்டு விட்டார்கள்.